"இந்திய மீனவர்களை (தமிழக) விடுவிக்க நடவடிக்கை வேண்டும்” - மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்

LATEST NEWS

500/recent/ticker-posts

"இந்திய மீனவர்களை (தமிழக) விடுவிக்க நடவடிக்கை வேண்டும்” - மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்ததில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை கடற்படையினரால் கடந்த 8 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 2977 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

image

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அந்தக் கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுளளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/5H8oy32
via IFTTT

Post a Comment

0 Comments