குற்றவாளியை கண்டுபிடிக்க சாமியாரிடம் ஆலோசனை கேட்ட போலீசுக்கு நேர்ந்த கதி!

LATEST NEWS

500/recent/ticker-posts

குற்றவாளியை கண்டுபிடிக்க சாமியாரிடம் ஆலோசனை கேட்ட போலீசுக்கு நேர்ந்த கதி!

கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க சாமியாரிடம் ஆலோசனை கேட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.

17 வயது சிறுமியை கொன்ற வழக்கு தொடர்பாக சாமியாரிடம் ஆலோசனை கேட்ட அசோக் ஷர்மா என்ற உதவி எஸ்.ஐ-யின் வீடியோ வைரலானதை அடுத்து அவர் மீது விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் உதவி சப் இன்ஸ்பெக்டர் அசோக் ஷர்மா, கொலை குற்றவாளிகளின் பெயர் பட்டியலை அந்த சாமியாரிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறார். இது யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பதிவாகியிருக்கிறது.

image

அதில், “நீங்கள் கொண்டு வந்த குற்றவாளிகளின் பட்டியலில் நான் சொல்லப்போகும் நபரின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என்றும், இந்த வழக்கில் அந்த நபரை விசாரணைக்காக கைதும் செய்யப்பட்டிருக்கிறார்” என அந்த சாமியார் போலீசார் அசோக் ஷர்மாவிடம் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து சாமியாரிடம் ஆலோசனை கேட்ட அசோக் ஷர்மாவை இடைநீக்கம் செய்து சத்ராபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சச்சின் ஷர்மா உத்தரவிட்டிருக்கிறார்.

இதனிடையே கடந்த ஜூலை 28ம் தேதி சத்ராபூர் மாவட்டத்தில் உள்ள பமிதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் சிறுமியின் உறவினர்களான ரவி அஹிர்வார், ராகேஷ் அஹிர்வார் மற்றும் அமன் அஹிர்வார் ஆகிய மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.

ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த மூவரையும் விசாரணைக்கு பின்னர் விடுவித்திருக்கிறார்கள். ஆனால் அசோக் ஷர்மா சாமியாரிடம் ஆலோசனை கேட்டு வந்த பிறகு கொல்லப்பட்ட சிறுமியின் மாமா திராத் அஹிர்வாரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஆதாரத்தின் பேரில்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சாமியாரின் அறிவுரைப்படி அல்ல என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சச்சின் ஷர்மா கூறியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/uIQ7P3D
via IFTTT

Post a Comment

0 Comments