''நான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகியபோது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார்'' என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த 'சூப்பர் 4' சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், போட்டிக்கு பின் இந்திய வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது எம்.எஸ். தோனி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, ''நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும் தான். எனது செல்போன் எண் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், யாரும் எனக்கு 'மெசேஜ்' அனுப்பவில்லை. தோனி மீது நான் கொண்டுள்ள மரியாதை மற்றும் இணைப்பு உண்மையானது. என்னால் அவர் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை. அதேபோல், அவரால் நான் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை'' என்றார்.
நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
#WATCH | When I left Test captaincy, only MS Dhoni messaged me. A lot of people have my number, but no one messaged me. The respect and connection with him (MS Dhoni) is genuine... neither he is insecure about me, nor I am insecure about him...: Virat Kohli, Indian cricketer pic.twitter.com/kSTqAdfzs5
— ANI (@ANI) September 4, 2022
இதையும் படிக்க: கடைசி ஓவரில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி - இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/qKWXfCE
via IFTTT
0 Comments