பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் லிஸ் டிரஸ்! பதவியேற்பு எப்போது?

LATEST NEWS

500/recent/ticker-posts

பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் லிஸ் டிரஸ்! பதவியேற்பு எப்போது?

இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றி வந்த லிஸ் டிரஸ், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கை தோற்கடித்து, பிரதமராகியுள்ளார் லிஸ் டிரஸ்.

பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் சில வாரங்களுக்கு முன்னர் பதவி விலகியிருந்தார். அதைத்தொடர்ந்து அங்கு பிரதமர் தேர்வுக்கான போட்டிகளும், தேர்ந்தெடுத்தல் பணியும் தீவிரமாக நடந்துவந்தன. இந்நிலையில் பிரதமர் தேர்தல் அங்கு செப்டம்பர் 2-ம் தேதி நடந்தது. அதில் லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் பங்குகொண்டனர். ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர்கள் இருவரில் லிஸ் டிரஸ் இன்று பிரதமராக தேர்வுசெய்யப்பட்டார். பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

image

ரிஷி சுனக் 60,399 வாக்குகள் பெற்ற நிலையில், லிஸ் டிரஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து முந்தைய அதிபர் போரிஸ் ஜான்சனுடன் இணைந்து, இங்கிலாந்து ராணி எலிசெபத்தை லிஸ் டிரஸ் சந்திப்பார் என சொல்லப்படுகிறது. அதன்பிறகே அவர் பதவியேற்கக்கூடும். லிஸ் டிரஸ்-க்கு, வயது 46. இப்போது இங்கிலாந்தில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழ்நிலையில், தற்போது அதை சமாளிக்கும் மிகப்பெரிய சவால் லிஸ் டிரஸ்க்கு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

image

தேர்தல் வாக்குறுதியாக லிஸ் டிரஸ் `பிரிட்டன் மக்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளை அதிகரிக்கும் எரிசக்தி பிரச்னையை தீர்க்க முன்னுரிமை அளிப்பேன். உள்நாட்டு எரிசக்தி விநியோகத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும். வரிக்குறைப்பு சலுகைகளும் உண்டு’ என்று அறிவித்திருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/d9nAaDP
via IFTTT

Post a Comment

0 Comments