”ஸ்டார்டம் யாருக்கு வேணா இருக்கலாம்; ஆனா சூப்பர்ஸ்டார்”-ரஜினிக்காக வரிந்துகட்டிய Netizens

LATEST NEWS

500/recent/ticker-posts

”ஸ்டார்டம் யாருக்கு வேணா இருக்கலாம்; ஆனா சூப்பர்ஸ்டார்”-ரஜினிக்காக வரிந்துகட்டிய Netizens

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று ரசிகர்களுக்காக குட்டி ஸ்டோரி கூறியது, செல்ஃபி வீடியோ எடுத்தது சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதுபோக ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ, 9 மில்லியன் பார்வையாளர்களை பெற்றும் 3 லட்சத்துக்கும் மேலான லைக்ஸ்களையும் அள்ளியிருக்கிறது.

இப்படி இருக்கையில், விஜய்யின் வாரிசு பட விழாவுக்கு வருகை தந்த ரசிகர்கள் பட்டாளம் குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர், “இதுபோன்ற கூட்டம் ரஜினிக்கு கூட வந்திருக்காது” என கேப்ஷன் இட்டு விஜய்யின் செல்ஃபி வீடியோவை ரீட்வீட் செய்திருந்தார். அந்த பதிவைக் கண்ட ரஜினி ரசிகர்கள் மற்றும் பிற சினிமா ரசிகர்கள் கொதித்தெழுந்து quote tweet செய்து வருகிறார்கள்.

அதன்படி @Charan151515 என்ற அந்த பயனரின் குறிப்பிட்ட அந்த ட்வீட்டை கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலானோர் பகிர்ந்து இந்திய சினிமாவுக்கும் ரஜினிகாந்துக்கும் இடையேயான திரை பந்தம் குறித்து பிற உச்ச நட்சத்திரங்கள் பகிர்ந்த பல பதிவுகளை சுட்டிக்காட்டி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, தர்பார் பட விழா ஒன்றில் மறைந்த நடிகர் விவேக், ரஜினி குறித்து பேசியபோது, “40 ஆண்டுகளை கடந்து வந்திருந்தாலும் ரஜினிக்கான அந்த சூப்பர்ஸ்டார் நாற்காலி இன்னும் அவர் வசம்தான் இருக்கிறது. சூப்பர்ஸ்டார் வேறு ஸ்டார்டம் (stardom) வேறு. எல்லாரும் உழைத்து ஒரு இடத்துக்கு வரும்போது நிச்சயம் அந்த சூப்பர் ஸ்டார்டம் கிடைக்கும். ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினி சாருக்கு மட்டும்தான்” என கூறியிருப்பார்.

அதேபோல, ’சென்னை எக்ஸ்பிரஸ்’ பட நிகழ்ச்சியின் போது தீபிகாவிடம் ரஜினிகாந்த & ஷாருக்கான் என இரு சூப்பர் ஸ்டாருடன் நடித்திருக்கிறீர்கள். இருவரில் யாரு பெஸ்ட் என கேள்வி கேட்க அதற்கு ஷாருக்கானிடம் இருந்து எந்த மறுதலிப்பும் இல்லாமல் “அப்படி பார்த்தால் தீபிகா ஒரு சூப்பர் ஸ்டார் உடன்தான் நடித்திருக்கிறார். இந்த உலகத்துக்கே தெரியும் யாரு சூப்பர் ஸ்டார் என்று. அது ரஜினி சார் மட்டும்தான்” என பேசியிருப்பார்.

இதனையடுத்து, யூடியூபர்ஸிடம் பேசிய கேரள ரசிகர்கள், “இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்” எனக் கூறியதும், கபாலி படத்தின் போது மலேசியாவில் இருந்த ரஜினியை காணக்குவிந்த ரசிகர் கூட்டத்தின் வீடியோவும் பகிரப்பட்டு ரசிகர்கள் தரப்பில் பதிலடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு, “தமிழ்நாட்டில் விஜய்தான் சூப்பர் ஸ்டார்” என ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்பு பேசியிருந்தது சர்ச்சையான பிறகும், இசை வெளியீட்டின்போதும் அதையே மீண்டும் கூறியிருந்தார். இதனைக் குறிப்பிட்டும் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்திய சினிமாவுக்கு எப்போதுமே சூப்பர்ஸ்டாராக இருப்பது ரஜினிகாந்த் மட்டும்தான் என்று சுட்டிக்காட்டியும் பதிவுகள் பறக்கவிடப்படுகிறது. இதில் ரஜினி ரசிகர்கள்கள் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் பலரும் இந்தியாவின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரத்தில் ஒருவர் ரஜினி என்றும் சிலாகித்திருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Gm4fz3k
via IFTTT

Post a Comment

0 Comments