சேலத்தை சேர்ந்த ஒருவரின் குடும்ப புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு பணம் கேட்டு மிரட்டியதாக தூத்துகுடியை சேர்ந்த இளைஞரொருவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது குடும்ப புகைப்படத்தை அடையாளம் தெரியாத நபர் முகநூலில் பதிவிட்டு அதனை நீக்க பணம் கேட்டு மிரட்டுவதாக சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சேலம் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார், தூத்துக்குடியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து சரத்குமாரிடம் நடைபெற்ற விசாரணையில், இவர் பல எண்களை தனது செல்போனில் பதிவு செய்து, அதில் எந்த எண்ணில் பெண்களின் புகைப்படம் உள்ளதோ அதை எடுத்து முகநூலில் பதிவிட்டு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விடுத்துள்ள அறிக்கையில், ‘பொதுமக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக வாட்ஸ் dp ல் புகைப்படம் வைப்பவர்கள் view my contacts or nobody, முகநூல் பக்கத்தில் profile வைப்பவர் lock செய்து வைக்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளனர். அனுமதியின்றி ஒருவரின் புகைப்படத்தை எடுத்து பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments