மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான இ டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் கட்டம் இரண்டுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவை, மதுரை போன்ற இடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 17 நிறுத்தங்கள் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையம், வசந்தநகர் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதன் திட்ட மதிப்பாக ரூ.8 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 கோடி மதிப்பில் 120 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 150 நாட்களுக்குள் மொத்த ஒப்பந்தமும் முடிவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோமீட்டர் நீளத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் தயாரிக்கப்பட உள்ளன. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி கொடுத்தால் நான்கு ஆண்டுகளில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments