காதலியை கொன்று Freezerல் வைத்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் திருமணம்! டெல்லியில் தொடரும் அவலம்

LATEST NEWS

500/recent/ticker-posts

காதலியை கொன்று Freezerல் வைத்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் திருமணம்! டெல்லியில் தொடரும் அவலம்

காதலியை கொன்று ஃப்ரீசரில் வைத்திருந்த தாபா உரிமையாளரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

தெற்கு டெல்லியில் உள்ள நசாப்கார்க்கை சேர்ந்தவர் சச்சின் கெலாட். இவர் டெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சச்சின் கெலாட், அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அலைகழித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சச்சின் கெலாட் வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கின்றார். இதை உணர்ந்த காதலி, சச்சின் கெலாட்டின் காதலி தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்

image

இதனால் ஆத்திரம் அடைந்த சச்சின் கெலாட் சில நாட்களுக்கு முன்பு காதலியை கொன்றுள்ளார். அத்துடன் அவரது உடலை தாபாவின் ஃபிரீசரில் வைத்துள்ளார். உடல் பிரீசரில் 3 நாட்களாக இருந்த நிலையில், இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விசாரணை மூலம் கைப்பற்றினர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சச்சின் கெலாட்டையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். பெண்ணை கொன்று ஃபிரீசரில் காதலன் வைத்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

image

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், இப்பெண்ணை கொலை செய்த அன்றே சச்சின் கெலாட் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். கொலை செய்த காதலியை, ஃபோன் டேட்டா கேபிள் மூலம் கொலை செய்திருக்கிறார் அவரென தெரியவந்துள்ளது. 

சமீபகாலமாகவே தலைநகர் டெல்லியில் காதல் விவகாரத்தில் கொடூரமான முறையில் கொலைகள் நிகழ்ந்த வருவது, அங்கு அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments