WWE குத்துச்சண்டை மேடைக்கு செல்லும் நுழைவாயிலின் அருகிலிருந்து ஓடிவந்த ரசிகர் ஒருவர், குத்துச்சண்டை வீரரான சேத் ரோலின்ஸை தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பதின்ம வயதினரை கவர்ந்த WWE குத்துச்சண்டை
உலக குத்துச்சண்டை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வரும், WWE போட்டிகளுக்கு உலகம் முழுவதும் அதிகளவிலான ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கின்றனர். இரண்டு குத்துச்சண்டை வீரர்கள் பரிசுகள் அல்லது கோப்பைகளுக்காக ஒருவரை ஒருவர் மூர்ச்சையாகும் வரை தாக்கிக்கொள்ளும் இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியானது, சிறுவர்கள், பதின்ம வயதினர்கள் தொடங்கி அனைத்து வயதினரும் ரசித்து பார்க்கக்கூடிய ஒன்றாக இருந்துவருகிறது. இந்தப் போட்டிகளானது எப்போதும் வீடுகளில் விளையாட கூடாத ஒன்றாக தான் தொடர்ந்து ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. மேலும் இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதையும் வெளிப்படுத்தும் விதமாகவே பல வீடியோக்களை WWE வெளியிட்டுவருகிறது. இருப்பினும் அவ்வப்போது இந்த விளையாட்டை உணர்வுபூர்வமாகவும், சீரியசாகவும் எடுத்துக்கொள்ளும் பல ரசிகர்கள், விளையாட்டு வீரர்களின் மேல் தாக்குதல் நடத்துவது என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
WWE வீரர் சேத் ரோலின்ஸை ஓடிவந்து பயங்கரமாக தாக்கிய ரசிகர்!
அந்த வகையில் தற்போது WWE சூப்பர் ஸ்டார் வீரரான சேத் ரோலின்ஸ் போட்டியை முடித்துவிட்டு அரங்கை விட்டு வெளியேறுவதற்கு செல்லும் போது, நுழைவாயிலின் பேரிகேட்டிற்கு பின்பக்கமாக இருந்து குதித்து வந்த ரசிகர் ஒருவர், சேத் ரோலின்ஸை கோரமாக தாக்கி அவரை கீழே தள்ளினார். பிறகு அவர் மேலே பாய்ந்த அவர், தொடர்ந்து தாக்குதலை நிகழ்த்த ஆரம்பித்துவிட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் வலி பொறுக்க முடியாத சேத் ரோலின்ஸும் பதிலுக்கு அவரை தாக்க ஆரம்பித்துவிட்டார். பின்னர் அங்கு ஓடிவந்த அம்பயர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் இருவரையும் பிரித்து வைத்து, சேத் ரோலின்ஸை அழைத்து சென்றனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி வைராலாகி வருகிறது.
தாக்குதல் குறித்து WWE வெளியிட்ட அறிக்கை!
இந்நிலையில் ரசிகர் ஒருவர் வீரரை தாக்கிய விவகாரம் குறித்து, WWE ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், தங்கள் கலைஞர்களையும் அவர்களின் பாதுகாப்பையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் சேத் ரோலின்ஸைத் தாக்கிய நபர் தற்போது நியூயார்க் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும், சட்டத்தின் முழு அளவிற்கு வழக்கு தொடரப்படும் என்றும் WWE தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது லோகன் பால் மற்றும் சேத் ரோலின்ஸ் மோதல் என்பது தற்போது முதற்பார்வையில் இருந்துவருகிறது. மூன்று வாரங்களில் 2 முறை லோகன் பால், சேத் ரோலின்ஸை நாக் அவுட் செய்துள்ளார். இந்நிலையில் லோகன் பால் குறித்து பேசியிருந்த சேத் ரோலின்ஸ், ஒரு சோஷியல் மீடியா ஆங்கராக இருந்த ஒருவர் நேரடியாக சென்று புட்பால் விளையாட முடியாது இல்லையா என்று விமர்சித்த அவர், ரெஸ்ட்லிங்கில் லோகன் பால் இருப்பதை தான் விரும்பவில்லை என்று கூறினார். லோகன் பால் ஒரு சோஷியல் மீடியா ஆங்கராகவும், ரெஸ்ட்லராகவும் இருந்துவருகிறார். இந்நிலையில் தான் இந்த ரசிகரின் அட்டாக் நடந்துள்ளது.
A Fan attacks Seth Rollins at WWE Raw in Brooklyn.... pic.twitter.com/Ya5q3ljPxU
— Fight Haven (@FightHaven) March 20, 2023
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/xhnFdAO
via IFTTT
0 Comments