மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ரூ. 1100 விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் 600 ரூபாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.
தென் மாவட்டங்களின் பிரதான மலர் சந்தையாக விளங்கும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையான உயர்ந்துள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளதாலும் மல்லிகை உள்ளிட்ட பிரதான பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது,
நேற்று வரை 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று 600 ரூபாய் விலை உயர்ந்து 1100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் நேற்று வரை 600 ரூபாயாக்கு விற்பனையான பிச்சி பூ 400 ரூபாய் விலை அதிகரித்து 1000 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் 400 ரூபாய் விலை அதிகரித்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முல்லை பூ 500 ரூபாய்க்கும், கேந்தி பூ 50 ரூபாய்க்கும், அரளி பூ 100 ரூபாய்க்கும், சம்மங்கி 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது கொரோனா காலத்தில் மல்லிகை பூ சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் பெரும்பாலான விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடியை கைவிட்டதால் மல்லிகைப் பூவின் வரத்து குறைந்து விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/hJETQOV
via IFTTT
0 Comments