ஹோட்டலில் ரூ.23 லட்சம் பில் கட்டாமல் ஓடிய நபர்... ஸ்பூன் - ட்ரேவை கூட விட்டுவைக்காத அவலம்!

LATEST NEWS

500/recent/ticker-posts

ஹோட்டலில் ரூ.23 லட்சம் பில் கட்டாமல் ஓடிய நபர்... ஸ்பூன் - ட்ரேவை கூட விட்டுவைக்காத அவலம்!

லீலா பேலஸ் ஹோட்டலில் சுமார் 23 லட்சத்துக்கு அறை எடுத்துவிட்டு, கட்டணம் செலுத்தாமல் புறப்பட்டுள்ளார் ஒருவர்.

டெல்லியின் மிக முக்கியமான 5 ஸ்டார் ஹோட்டலான லீலா பேலஸில், வாடகைக்கு ரூம் எடுத்து தங்கிய நபர் ஒருவர், தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பதாகவும், அபுதாபியின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஃபலாஹ் பின் சயீத் அல் நஹ்யானின் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும் பொய்யான தகவல்களை கொடுத்து அறை எடுத்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட்டில் அறை எடுத்திருந்த அவர், நவம்பர் வரை தங்கி இருந்திருக்கின்றார். அதன்பின் தகவலேதும் கூறாமல் அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார்.

image

இதில் ஹோட்டலுக்கு அவர் செலுத்தவேண்டிய நிலுவை தொகை சுமார் 23 லட்சத்தை தராமல் அவர் மாயமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. செய்வதறியாது திகைத்த ஹோட்டல் நிர்வாகிகள் கையில் பில்லுடன் அவரை தேடி வருகின்றனர்.

லீலா ஹோட்டல் நிர்வாகம் அளித்த புகாரின்படி, அந்நபரின் பெயர் Md ஷெரீப் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் அளித்த பிற தகவல்களான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பது - அபுதாபியின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் அலுவலகத்தில் பணிபுரிந்தது போன்றவை யாவும் பொய்யாக இருப்பதால் இத்தகவலும் நம்பும்படி இல்லையென சொல்லப்படுகிறது. அந்நபர் அளித்துள்ள தகவலில், தான் ஷேக் ஃபலாஹ் பின் சயீத் அல் நஹ்யானின் அலுவலகத்தில் ஷேக்குடன் தனிப்பட்ட முறையில் வேலை செய்வதாகவும், இந்தியாவுக்கு தொழில் ரீதியாக வந்திருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. 

image

ஷாரிஃப், தனது போலியான பிசினஸ் கார்டு, யு.ஏ.இ ரெஸிடண்ட் கார்டு ஆகியவற்றை கொடுத்திருக்கிறார். போலியான இவற்றின்மூலம், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி வரை தங்கி ரூ. 23,46,413 ஏமாற்றியுள்ளார். மொத்தம் ரூ.35 லட்சம் வரை பில் வருவதாக சொல்லப்படும் நிலையில், அதில் ரூ.11 லட்சத்தை அவர் செலுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ரூ. 20 லட்சத்துக்கு அவர் செக் கொடுத்திருந்ததாகவும், அது பௌன்ஸ் ஆகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், தப்பித்து சென்ற அந்நபர் தன்னுடனே ஹோட்டலிலிருந்த சில்வர்வேர் (கரண்டிகள், ஸ்பூன்கள்) மற்றும் mother of pearl tray என்று சொல்லப்படும் ட்ரே ஆகியவற்றை எடுத்துச்சென்றிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments