”பாதிக்கப்பட்ட பெண்களின் படங்களை பகிராதீர்கள்”-பாதிரியார் விவகாரத்தில் போலீசார் எச்சரிக்கை

LATEST NEWS

500/recent/ticker-posts

”பாதிக்கப்பட்ட பெண்களின் படங்களை பகிராதீர்கள்”-பாதிரியார் விவகாரத்தில் போலீசார் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் தவறு செய்திருந்தால் நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

image
பேட்டியின் முழுவிபரம்:

“கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாலியல் வழக்கில் சிக்கி கைதாகி சிறையில் இருக்கும் பாதிரியார் பெனட்டிக் ஆண்ட்ரோ குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பான வழக்கு என்பதால் போலீசார் நிதானமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள பாதிரியார் பெனெட்டிக் ஆண்டவர் தேவைப்பட்டால் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவார்கள். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து யாரும் சமூக வலைதளங்களில் படங்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்வதாகவும், இந்த வழக்கில் மேலும் பல்வேறு கட்ட விசாரணைகள் நடக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுவரை நடந்தது என்ன?

யார் இந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(30). இவர் குழித்துறையை தலைமையிடமாகக்கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை என்னும் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பாதிரியார் பெனடிக்ட் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வந்தன. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட் களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இளம் அளித்த அதிர்ச்சி புகார்!

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர், பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும். உடலில் மோசமாக தொட்டதாகவும். பின்னர் வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பியதாகவும். அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், பேச்சிப்பாறையில் இருந்து பிலாங்காலை சர்ச்சுக்கு மாற்றல் ஆகி சென்ற பிறகும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் அந்த பெண் புகாரில் கூறி இருந்தார்.

5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

இளம்பெண் அளித்த அந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார், பாலியல் உணர்வை தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைத்தளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இதனையடுத்து பாதிரியார் பயன்படுத்திய செல்போண் நம்பர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போண் எண்களையும் தனிப்படை போலீசார் கண்காணித்து வந்த நிலையில், நாகர்கோவில் வழியாக பாதிரியார் செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் பாதிரியாரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார், நாகர்கோவில் மாஜிஸ்திரேட் 2 வது எண் வீட்டில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைப்பதற்கு மாஜிஸ்ட்ரேட் தாயுமானவன் உத்தரவிட்டா.ர் அதனைத் தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments