”இனி உங்க ப்ரண்ட்ஸ் எந்த குரூப்ல இருக்காங்கனு பார்க்கலாம்” - வாட்ஸ் அப்பில் புது அப்டேட்!

LATEST NEWS

500/recent/ticker-posts

”இனி உங்க ப்ரண்ட்ஸ் எந்த குரூப்ல இருக்காங்கனு பார்க்கலாம்” - வாட்ஸ் அப்பில் புது அப்டேட்!

மெசேஜ் ஆப் ஆன வாட்சப் இரண்டு விதமான புதிய அப்டேட்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. அதன்படி நீங்கள் உங்கள் நண்பர்கள் எந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்பதையும், உங்கள் குரூப்களில் யார் யாரை இணைக்கலாம் விலக்கலாம் என்பது குறித்த கூடுதல் அம்சங்களை வழங்குகிறது.

மெட்டாவின் மெசேஜ் ஆப் ஆன வாட்சப் பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக புகைப்படங்களை அதிகளவு பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், வாட்சப் ஸ்டேட்டஸ்ஸில் பகிரப்படும் படங்கள் மற்றவர்களின் உரிமைகளை பாதிக்காத வண்ணம், துன்புறுத்தாத வண்ணம் இருக்கவேண்டும் என்பதற்காக தவறான பகிர்வுகளை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்விதமான ரிப்போர்ட் அம்சங்களையும் அறிமுகப்படுத்தியது. அந்த சிறப்பம்சங்கள் பயன்பாட்டாளர்களின் பெரிய வரவேற்பை பெற்றநிலையில், தற்போது புதிய இரண்டு அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

image

அந்த வகையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் முதல் அம்சமாக, குரூப்களில் யாரை இணைக்கலாம் இணைக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் முழுக்க முழுக்க அட்மினையே சார்ந்து இருக்கும் வண்ணம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

முதலாவது அம்சம்,

”சில தனிப்பட்ட நண்பர்கள் வட்டம் அல்லது குறிப்பிட்ட வகையிலான நபர்கள் மட்டும் ஒரு குழுவாக இணைத்துக்கொள்ள கூடிய வகையிலான அம்சத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. யார் யாரை இணைக்கலாம், யார் யாரை இணைக்ககூடாது என்ற உரிமை முழுக்க முழுக்க அட்மினையே சார்ந்திருக்கும் வண்ணம் இதன் கட்டுப்பாடு எளிமையானதாக இருக்கிறது’. மேலும் நம் குரூப்களில் மற்றவர்களை இணைக்கவோ அல்லது நமது குரூப்பை மற்றவர்களுக்கு பகிரும் விதமாகவோ லிங்க்குகளை வாட்சப் அறிமுகம் செய்யவிருக்கிறது.

image

இரண்டாவது அம்சத்தை பொறுத்தவரையில்,

நம் நண்பர்களும் நாமும் எந்தெந்த மியூச்சுவல் குழுமத்தில் இருக்கிறோம் என்பதை எளிதாக அறிந்துகொள்ளும் வகையிலான அம்சத்தையும், உங்கள் நண்பர்கள் எந்தெந்த குழுமத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. நண்பர்களின் நம்பர்களையோ அல்லது பெயர்களையோ தேடும் பொழுதே அவர்கள் எந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஒரு குழுமத்தில் நீங்கள் முன்னர் இருந்துள்ளீர்கள் அல்லது மற்றவர்களுக்கு ஒரு குரூப்பை பகிர்ந்துள்ளீர்கள் என்றால், தற்போது அதனை சர்ச்சில் தேடியே அறிந்துகொள்ளும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

image

இந்த சிறப்பம்சங்களில் தற்போது வேலை செய்துவருவதாக மெட்டா அறிவித்துள்ளது. இதை தவிர கூடுதலாக சில சிறப்பம்சங்களையும் வாட்சப் பியூச்சரில் அறிமுகம் செய்யவிருப்பதாக தெரிகிறது. அந்தவகையில், விரைவில் பயன்பாட்டாளர்கள் தங்கள் ஒரிஜினல் குவாலிட்டியில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கும் அம்சத்தையும், ஒரே நேரத்தில் குறைந்தது 100 படங்களைப் பகிரும் அம்சத்தையும் பெறும் வகையில் பீட்டா செயல்பட்டு வருகிறது. மேலும் வாட்சப் பயன்பாட்டாளர்கள் QR குறியீடுகளைப் பயன்படுத்தி தங்களது சாட் ஹிஸ்டிரியை பகிர்ந்துகொள்ளும் அம்சத்தையும் அனுமதிக்கும் வகையில் மெட்டா செயல்பட்டுவருகிறது. ஆனால், இத்தகைய அம்சங்கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தற்போது தெரிவிக்கப்படவில்லை.

இதையும் படிக்கவும்:- ”இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது எச்சரிக்கையா வைங்க..”-வாட்சப்பில் அறிமுகமாகும் புதிய அப்டேட்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments