தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அவதூறு: வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்க அட்மின் கைது!

LATEST NEWS

500/recent/ticker-posts

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அவதூறு: வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்க அட்மின் கைது!

நேற்று முன்தினம் தாக்கலான தமிழக பட்ஜெட்டில், ‘குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம்’ அறிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் மோசமான வீடியோவொன்றை, வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கர் என்ற ட்விட்டர் கணக்கில் இளைஞரொருவர் வெளியிட்டார். அப்பக்கத்தின் அட்மினை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் (20 ஆம் தேதி) நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது திமுக தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தரம்தாந்த வகையில் கிண்டல் செய்து, வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கர் என்ற ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார் ஒருவர். இந்த வீடியோ வைரலான நிலையில், ‘பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தமிழக அரசின் மீது அவதூறு பரப்பும் வகையிலும் இந்த வீடியோ அமைந்திருக்கிறது’ எனக்கூறி மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் புகார் அளித்தார். அவர் தன் புகாரில் ‘இந்த வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் கோரியிருந்தார்.

image

அப்புகாரின் பேரில் அந்த ட்விட்டர் கணக்கு பக்கத்தின் அட்மின் பிரதீப் மீது, பெண்களை அவமானபடுத்துதல், கலகத்தை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ட்விட்டர் கணக்கு நடத்தி வரும் பிரதீப்பை நேற்று இரவு கும்மிடிப்பூண்டி அருகே வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து பிரதீப் கைதை கண்டித்து சவுக்கு சங்கர் தனது பக்கத்தில் வேறொரு பதிவிட்டார். தனது பதிவில் அவர், ‘எங்கள் அட்மின் கைதுக்கு, அமைச்சர் பழனிவேல் தியராஜனின் தலையீடுதான் காரணம்’ என்ற குறிப்பிட்டார். தன்மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். நிதியமைச்சர், “இது 100% பைத்தியக்காரத்தனம் என்பதால் நான் எதிர்வினையாற்றுகிறேன்.

முதலில், இப்படியொரு ட்விட்டர் பக்கம் இருப்பதே எனக்கு தெரியாது, அதனால் நான் எந்த வீடியோவையும் பார்க்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை.

பணியிட நீக்கம் செய்யப்பட்ட டிவிஏசி க்ளெர்க் சொல்லும் மாநில பட்ஜெட் மீதான “விமர்சனம்” என்னை தொந்தரவு செய்யும் நிலை ஏற்படும்போது… நான் பொதுவாழ்விலிருந்தே விலகிவிடுவேன்” என்றுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments