விரைவில் ட்விட்டர் வாசிகள் தங்களது ட்விட்டர் இடுகையில் குறைவான சொற்களுக்கான லிமிடேசன் இல்லாமல் கட்டுரைகளை எழுத முடியும் என்றும், அதற்காக ட்விட்டர் நிர்வாகம் தொடர்ந்து வேலை செய்து வருவதாகவும் ட்விட்டரின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக திகழும் ட்விட்டரை கோடிக்கணக்கான பயனர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். வெளியுலகத்தோடு தன்னை இணைத்துகொள்ளும் முதன்மை ஆன்லைன் வழித்தளமாக இருந்துவரும் ட்விட்டரில், தன்னுடைய உணர்வையும், கருத்துகளையும் பெரிதாகவோ இல்லை பெரிய பதிவாகவோ எழுதி நம்மால் பதிவிட முடியாது. ஒரு விசயத்தை விரிவாக விளக்க வேண்டும் என நினைக்கும் பல ட்விட்டர் வாசிகளுக்கு, ட்விட்டரின் எழுத்து லிமிடேசன் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பியூச்சராக தான் இருந்து வருகிறது.
சிலமுறை உணர்வுகளை உள்ளது உள்ளபடியே பகிரமுடியாமல் போகும் போது, ஒருவிதமான எரிச்சலை கூட இந்த இடுகையின் லெட்டர்ஸ் லிமிடேசன் நிச்சயம் நமக்கு அளிக்கும். ஆனால் அதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவை எட்டும் வகையில், அதிக வார்த்தைகளுடன் நீண்ட கட்டுரைகளை ட்விட்டர்வாசிகள் எழுதுவதற்கான வேலைகளை ட்விட்டர் இயங்குதளம் செய்துவருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதை ட்விட்டரின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய டுடே வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் எவ்வளவு லெட்டர்ஸ் லிமிடேசன் இருந்தது?
ட்விட்டரில் ஒரு போஸ்ட் செய்யவேண்டும் என்றால், இதற்கு முன்பு எல்லா பயன்பாட்டாளர்களுக்கும் ஒரே மாதிரியான லிமிடேசன்ஸ் தான் இருந்துவந்தது. அதாவது 280 எழுத்துகள் வரை ட்விட்டர்கள் டைப் செய்து ட்வீட் செய்துகொள்ளலாம். ஆனால், எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு அது மாற்றப்பட்டு சாதாரண பயனாளர்கள் மற்றும் ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனாளர்கள் என இருவருக்கும் தனித்தனியே குறிப்பிட்ட அளவிலான எழுத்து லிமிடேசன்ஸ் மட்டுமே தற்போது வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது.
சாதாரண டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் 280 எழுத்துகள் வரையும், ப்ளூ டிக் வைத்திருக்கும் பயன்பாட்டாளர்கள் 4000 எழுத்துகள் வரையிலும் எழுதவும், இடுகை இடவும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த லிமிடேசன் என்பதை நீட்டித்து அதிக அளவிலான எழுத்துக்கள் எண்ணிக்கையில், ட்விட்டர் வாசிகள் இனி கட்டுரை எழுதி பதிவிட முடியும் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.
10,000 எழுத்துகள் வரை இனி எழுதலாம்!
இதற்கு முன்னதாக அனுமதிக்கப்பட்டு வந்த குறைந்த எண்ணிக்கையிலான எழுத்து லிமிடேசன்ஸை மாற்றி, இனி 10,000 எழுத்துகள் கொண்ட ட்வீட்களை பதிவிட மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்காக தொடர்ந்து இயங்குதளம் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த அம்சம் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், டிவிட்டரின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கின் இந்த நடவடிக்கையானது, பெரும்பாலான ட்விட்டர் வாசிகளிடம் நிச்சயம் மிகுந்த வரவேற்பை பெறும். மிகப்பெரிய பதிவை இடுகையிட அதிக எழுத்துகளை பெற விரும்பும் பயனர்களுக்கு, இந்த பியூச்சரானது நிச்சயம் மிகப்பெரிய நிவாரணத்தை வழங்கும் என்றால் அது மிகையாகாது.
இந்த அம்சமானது அனைவருக்குமானதா? ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கானதா?
வரவிருக்கும் இந்த பியூச்சர் அம்சமானது ட்விட்டரின் ப்ளூ சந்தாவிற்கு மட்டும் வரையறுக்கப்படுமா? அல்லது பணம் செலுத்தாத சாதாரண பயனர்களும் இந்த அம்சத்தை அனுபவிக்க முடியுமா? என்பது குறித்து தற்போது தெரியவில்லை. இது அனைத்து ட்விட்டர் வாசிகளாலும் விரும்பப்படும் பெரிய அம்சம் என்பதால், எலான் மஸ்க்கின் சமீபத்திய முடிவுகளின்படி சென்றால், அவர் அதை இலவசமாக வழங்காமல் இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஏற்கனவே அதிக எழுத்துகளை பெறுவதில் சந்தா இருந்துள்ளதால், அதையே மீண்டும் அவர் தொடர்ந்து அறிவிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் அவர் என்ன உறுதியாக அறிவிப்பார் என்பதை, எப்போது இந்த பியூச்சர் அறிமுகமாகிறதோ அப்போது தான் நமக்கு தெரிய வரும்.
எப்போது அறிமுகம் செய்யப்படும்?
இந்தியா டுடே அளித்திருக்கும் தகவலின் படி, எலோன் மஸ்க் இந்த அம்சம் எப்போது வரும் என்பது குறித்த எந்த தகவலையும் பகிரவில்லை என்றும், இது "விரைவில்" சேர்க்கப்படும் என்று மட்டும் தான் அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments