காஞ்சிபுரத்தில் விளையாட்டு வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு கால்பந்து, ஹாக்கி, தடகளம், கூடைபந்து, வாலிபால் , நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி மைதானங்கள் உள்ளது. நாள்தோறும் இங்கு பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்ட முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி, தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழை பயிற்சியாளர் முருகேசனிடம் கேட்டுள்ளார். இதையடுத்து சான்றிதழ் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தனது வீட்டில் உள்ளதாகவும், அங்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் பயிற்சியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டிற்குச் சென்ற வீராங்கனையை, பயிற்சியாளர் முருகேசன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிய வீராங்கனை, அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினருக்கு புகார் தெரிவித்த நிலையில், பயிற்சியாளர் முருகேசனை கைது செய்த விஷ்ணு காஞ்சி காவல்துறையினர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments