’’அரசு நிலங்களை யாரும் ஆட்டைய போட விடமாட்டோம். தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்; இல்லையெனில் நானே நீதிமன்றம் செல்ல வேண்டியது இருக்கும்’’ என புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் சிசிடிவி கேமராவை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். அப்போது பேசிய சட்டதுறை அமைச்சர் ரகுபதி, ‘’அரசு புதிய நலத்திட்டங்களைக் கொண்டு வரும்போது அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு நீதிமன்றம் செல்கிறார்கள். இதனால் உழவர் சந்தை, மின் மயானம், அரசு கல்லூரிகளை போராடி நமது பகுதிக்கு கொண்டுவர முயற்சிக்கும்போது உரிய நேரத்தில் செயலாற்ற முடியவில்லை.
ஆகவே அரசு நிலங்களை யாரும் ஆட்டைய போட விடமாட்டோம். தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்; இல்லையெனில் நானே நீதிமன்றம் செல்லவேண்டியது இருக்கும். நூறு நபர்களுக்கு நல்லது நடக்கும் என்றால் இரண்டு பேர் அதனை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்’’ என்று பேசினார்.
அதன்பின் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்டு பேரணியை கொடியை அசைத்து தொடக்கி வைத்தார். மாணவர்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கலந்துகொண்ட இந்த பேரணியானது பொன்னமராவதி முக்கிய சாலைகள் வழியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பேரணி இறுதியில் பொன்னமராவதி காவல் நிலையம் அருகே நிறைவடைந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/0a6wBXh
via IFTTT
0 Comments