”எனக்கு வயசு 112 ஆ,..” - ஆதார் அட்டை தவறை சரி செய்ய முடியாமல் தவிக்கும் பெண்!

LATEST NEWS

500/recent/ticker-posts

”எனக்கு வயசு 112 ஆ,..” - ஆதார் அட்டை தவறை சரி செய்ய முடியாமல் தவிக்கும் பெண்!

41 வயது பெண்ணை 123 வயது பெண்ணாக மாற்றிய ஆதார் அட்டை - திருத்தம் செய்ய முடியாமல் தவிக்கும் பெண்!

image

திருச்சி மாவட்டம், தாயனூர், தெற்கு தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் 1982 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஆதார் கார்டு எடுக்கும் பொழுது கவிதாவின் ஆதார் கார்டில் பிறந்த ஆண்டை 1982 என்பதற்கு பதிலாக 1900 என அச்சிட்டு வழங்கியுள்ளனர். 41 வயது பெண்ணுக்கு 123 வயது இருக்கும்படி ஆதார் கார்டில் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அரசின் எந்த சலுகைகளையும் பெற முடியாத நிலையில் உள்ளார், மேலும் அரசின் திட்டங்களுக்கும் ஆதார் கார்டை பயன்படுத்த முடியவில்லை. வாகனம் வாகனம் மற்றும் லோன் தொடர்பான சேவைகளும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

image

எந்த அரசு அலுவலகத்திற்கு சென்றாலும், அரசின் எந்த திட்டங்களுக்கும் ஆதார் தான் முதலில் தேவை என கூறும் பொழுது தன்னுடைய ஆதார் கார்டை தந்தால் அதனை நிராகரிக்கிறார்கள். இதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதார் கார்டில் பிறந்த ஆண்டை மாற்றக்கோரி பலமுறை முயற்சித்தும் பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் இல்லை எனக் கூறி பிறந்த ஆண்டை மாற்றி தர மறுக்கிறார்கள் .தன்னிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே உள்ளது .ஆனால் அதனை கொண்டு பிறந்த ஆண்டை மாற்ற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

image

இதனால் தான் கடுமையாக மன உளைச்சலில்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய ஆதார் கார்டில் பிறந்த ஆண்டை மாற்றி தர வேண்டும் என கூறி அந்தப் பெண் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/UjRxkGO
via IFTTT

Post a Comment

0 Comments